top of page

பிரசன்ன தமிழ் திருச்சபை

பிரசன்ன தமிழ் திருச்சபை, தோஹா, கத்தார்

 

பிரசன்ன தமிழ் ஆங்கிலிக்கன் திருச்சபை 2011ம் ஆண்டு மார்ச் 3ம் நாள் தொடங்கப்பட்டது. தோஹாவில் வசிக்கும் தமிழ்க் கிறிஸ்தவர்களின் நெடு நாள் ஜெபத்தின் பலனாக இத்திருச்சபை உருவாகியிருக்கிறது.

 

கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையில் பங்கேற்று “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும்” வளர்ந்து (எபேசியர் 4:15) “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கிற” (கலாத்தியர் 6:2) ஐக்கியத்தில் பெருக இத்திருச்சபை கிறிஸ்துவின் மக்களை அழைக்கிறது. கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூர்ந்து அவரது உயிர்த்தெழுதலை அறிக்கையிட்டு அவர் திரும்பி வரக்காத்திருக்கும் சபையாக வாழ்ந்து தூய ஆவியின் கனிகளை இவ்வுலகத்தில் கொடுத்து கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்வதே இந்த சபையின் நோக்கம்.

 

பல்வேறு பணிகளின் காரணமாகத் தாய் நாடு விட்டு இம்மண்ணில் தற்காலிகக் குடிகளாக வாழும் தமிழ்க் கிறிஸ்தவர்களுக்கு அடிப்படைத் தேவையான குடும்ப சூழலை உருவாக்கி நிறைவான வாழ்வைப் பெற்றுக்கொள்ள ஆழமான பற்றுறுதியை இச்சபை வளர்க்கிறது.

 

உலகளாவிய ஆங்கிலிக்கன் ஐக்கியப் பாரம்பரியத்தின் (பேராயர் ஆளுகை சபைக் கட்டமைப்பு முறை) இறையியலும் வழிபாட்டு முறையும் இத்திருச்சபையின் சிறப்பாகும். எருசலேம் மற்றும் மத்தியக்கிழக்கு நாடுகளின் பேராயக்குழுமத்தின் நான்கு திருமண்டலங்களில் ஒன்றாகிய சீப்புரு தீவு மற்றும் வளைகுடா நாடுகளின் திருமண்டலத்தில் இச்சபை பங்கு வகிக்கிறது.

 

ஆராதனை ஒழுங்கு

பரிசுத்த நற்கருணை ஆராதனை

வெள்ளிக்கிழமை மாலை 7:00 – 9:00

பிரசன்ன தேவாலயம், ஆங்கிலிக்கன் மையம்

 

வாராந்திர ஜெபக்கூட்டம்

வியாழக்கிழமை மாலை 7:00-8:00

சபை உறுப்பினர் இல்லங்கள்

 

பெண்கள் ஐக்கிய சங்க கூட்டம்

பிரதி மாதம் முதல் வெள்ளிக்கிழமை மாலை 8:45-9:30

பிரசன்ன தேவாலயம்

 

சிறுவர் வேத பாடசாலை

வெள்ளிக்கிழமை தோறும் மாலை 7:00-8:00

bottom of page